Tuesday, January 7, 2025
Wednesday, January 1, 2025
என் ஆசிரியருக்கு பிரியாவிடை கவிதை!
என் அன்பு ஆசிரியரே!
தங்கள் மைத்தூவலில்
துளிர்விட்ட தீ
மாணவ நெஞ்சங்களில்
அறிவாலும்
அன்பின் உணர்வுகளாலும்
ஒளிர்கிறது!
இது ஆசிரியர்
விடைபெறும் நேரம்
இருந்தும் ஆதிஅந்தமற்றது
அவர் ஊட்டிய மனிதம்...
என் அறிவும் மனிதமும்
மறையாதவரை,
என் ஆசிரியரின்
நினைவு பயணம்
என்னுடன் தொடரும்...!
என் அன்பு ஆசிரியரே!
இலையுதிர் காலமாக இருந்த
எங்கள் நாட்காட்டி
வசந்தக் காலமாக மாறியது
ஆசிரியரின் பல
அன்பு வார்த்தைகளால்...
கனவுகளை வளர்த்து
நம்பிக்கையை விதைத்த
உங்கள் எழுத்துகள்
என்றும் எங்கள் மனதில்
ஜொலிக்கும் விளக்கு,
அதை அன்பால் நிரப்புவோம்
கண்ணீரில் அல்ல..!
என் அன்பு ஆசிரியரே!
பிரிவு துயரமே!
பிரிந்தால்தானே
எங்கள் நெஞ்சங்களில்
உங்களை சிறைவைத்து,
சொல்கிறோம்..,
ஆசிரியரே!
நீங்கள் மறக்க முடியாத
அறிவொளியாளர்..!
ஹேரிஷ் த/பெ முகுந்தன் இயற்றிய கவிதை
Modul Masteri Fizik
"Modul Masteri Fizik SMK Ulu Tiram ( https://mylink.la/fizikku ) menyediakan soalan objektif online untuk Tingkatan 4 dan 5, berasaska...
.png)